• vilasalnews@gmail.com

விளாத்திகுளத்தில் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் வெடிகுண்டு தடுப்பு காவல் பிரிவினர் திடீர் சோதனையால் பரபரப்பு

  • Share on

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில், வெடிகுண்டு தடுப்புக் காவல் பிரிவினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் ஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மற்றும் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர்.

இதனையடுத்து, இந்தியா முழுவதும் ரயில் நிலையங்கள், கடற்கரை, பூங்கா, கோவில்கள், மசூதிகள், தேவாலயம், பேருந்து நிலையம் உள்ளிட்ட அதிக மக்கள் கூடும் இடங்களில் உச்சகட்ட பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படை மற்றும் மாநில காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 


தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, சாத்தான்குளம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் வெடிகுண்டு தடுப்புக் காவல் பிரிவினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பேருந்து நிலையம், விளாத்திகுளம் மீனாட்சி அம்மன் கோவில், எட்டையாபுரம் பேருந்து நிலையம், எட்டையாபுரம் பாரதியார் மணிமண்டபம், சிந்தலக்கரை வெட்காளியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உதவி ஆய்வாளர் கதிரேசன் தலைமையிலான 7 பேர் கொண்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம்  சோதனை நடத்தினர். பொது இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள டூவீலர்கள் உள்ளிட்ட வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.


  • Share on

தூத்துக்குடியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் - அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்!

கோவில்பட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

  • Share on