தூத்துக்குடியில் சிகரெட் பற்ற வைத்த நெருப்பால், பேனர் தீப்பற்றி எரிந்ததில் கார் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி பனிமய மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் இன்னாசி மகன் ஜெயசீலன் (60). கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு புறாக் கூண்டு வைத்துள்ளார். அந்த கூண்டை மறைப்பதற்காக அதை சுற்றி பிளக்ஸ் பேனரை கட்டியிருந்தார். இந்நிலையில் நேற்று போதையில் இருந்த அவர் சிகரெட் பற்றவைத்து தீக்குச்சியை பேனர் மீது வீசினாராம்.
இதில் பேனர் தீப்பற்றி எரிந்து ஜெயசீலன் மீது விழுந்தது. அப்போது குடிபோதையில் இருந்த அவரால் எழுந்திருக்க முடியவில்லையாம். இதனால் பலத்த தீக்காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்