• vilasalnews@gmail.com

பேரிடரில் இருந்து மீண்ட தூத்துக்குடி அனல்மின் நிலையம்

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் வ.உ.சி துறைமுகம் அருகில் தூத்துக்குடி அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு தலா 210 மெகாவாட் திறனில் ஐந்து அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம் தென்மாவட்ட மக்களின் மின் தேவையை பூர்த்தி செய்கிறது.

தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17,18ம் தேதிகளில் பெய்த அதீத கனமழையால் தூத்துக்குடியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தை வெள்ளம் சூழ்ந்தது. அங்குள்ள ஐந்து அலகுகளிலும் அம்மாதம் 17ஆம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், மழை வெள்ளத்திற்கு பின் தண்ணீரை அகற்றும் பணியில் பொறியாளர்கள், ஊழியர்கள் ஈடுபட்டனர் கடந்த டிசம்பர் 31ம் தேதி நான்காவது ஐந்தாவது அலகுகளில் மின் உற்பத்தி துவங்கியது. மேலும் முதலாவது அலகுகளில் கடந்த 10ஆம் தேதியும், இரண்டாவது அலகில் கடந்த 16ஆம் தேதியும் மின் உற்பத்தி துவங்கியது. தற்போது ஐந்து அளவில் மின் உற்பத்தி நடக்கிறது.

  • Share on

தூத்துக்குடியில் கோலப்போட்டி... வண்ணமயமான கோலம் போடுங்க... தங்க நாணயத்தை வெல்லுங்க!

தூத்துக்குடியில் மத்திய அரசு ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்டு நகை, பணம் பறிப்பு : 3 சிறுவர்கள் கைது!

  • Share on