• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் கோலப்போட்டி... வண்ணமயமான கோலம் போடுங்க... தங்க நாணயத்தை வெல்லுங்க!

  • Share on

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 21 ஆம் தேதி தூத்துக்குடியில் கோலப்போட்டி நடக்கிறது முதல் பரிசாக தங்க நாணயம் வழங்கப்படுகிறது.

தூத்துக்குடி மாநகராட்சி 39 வது வார்டு மற்றும் ரதவீதி சக்தி கேந்திர பாரதிய ஜனதா கட்சி சார்பில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 21ஆம் தேதி மாபெரும் கோலப் போட்டி நடக்கிறது.

பத்திரகாளியம்மன் கோவில் தெரு, ராஜப்பிள்ளை சந்து, வடக்கு ரத வீதி, வடக்கு ரத வீதி தொடர்ச்சி, கீழ ரங்கநாதபுரம், மேலரத வீதி, வடக்கு சம்பந்தமூர்த்தி தெரு, சிவன் கோவில் தெரு, கீழ ரத வீதி, பெருமாள் கோவில் தெரு, வரதராஜபுரம், கனகசபாபதி தெரு, தெப்பக்குளம் தெரு, தெப்பக்குளம் 1 வது தெரு, தெப்பக்குளம் 2 வது தெரு, டி ஆர் நாயுடு தெரு, சிவன் கோவில் சந்து, எம்ஜிஆர் காலனி, செல்வீஜர் 1வது தெரு, செல்வீஜர் 2 வது தெரு, செல்வீஜர் 3 வது தெரு, வ உ சி தெரு, வடக்கு காட்டன் ரோடு, மேல ரங்கநாதபுரம், மேல ரகமத்துல்லாபுரம், கீழ ரகமத்துல்லாபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் கொலை போட்டியில் பங்கேற்கலாம்.

மேற்கண்ட தெருக்களில் வீடுகள் முன்பாக போடப்பட்ட கோலங்களை, விழா குழுவினர், நடுவர் குழுவினர் காலை 8.30 மணி அளவில் பார்வையிட்ட பின்னர் பரிசுகள் அறிவிக்கப்படும். முதல் பரிசாக ஒரு கிராம் தங்க நாணயம், இரண்டாவது பரிசாக மூன்று நபர்களுக்கு வெள்ளி காமாட்சி விளக்கு, மூன்றாம் பரிசாக 10 நபர்களுக்கு பித்தளை காமாட்சி விளக்கு வழங்கப்படுகிறது.

போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் நிச்சயப்பரிசு வழங்கப்படுகிறது. அன்று 39 வது வார்டு பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு வழக்கறிஞர் சண்முக சுந்தரம்,  பாஜக மகளிர் அணி உஷா தேவி ஆகியோர் செய்து வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடியில் இருவருக்கு கத்திக்குத்து : 3 பேர் கைது

பேரிடரில் இருந்து மீண்ட தூத்துக்குடி அனல்மின் நிலையம்

  • Share on