தூத்துக்குடியில் தாயின் காலை மிதித்தவர்களை தட்டி கட்ட மகன் உட்பட இருவரை கத்தியால் குத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவது:-
தூத்துக்குடி மில்லர்புரம் சிலோன் காலணியில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது அப்போது அதே பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் ( 19 ) மது போதையில் அதே பகுதியை சேர்ந்த சூரிய பிரபு ( 24 ) என்பவருடைய அம்மாவின் காலை மிதித்தாராம். இதனையடுத்து, சூரிய பிரபு மற்றும் அவரது உறவினர் வீரபுத்திரன் ( 44 ) ஆகியோர் முனீஸ்வரனை தட்டிக்கேட்டுள்ளனர்.
இதில், அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் முனீஸ்வரன் மற்றும் 3 வது மைல் பகுதியை சேர்ந்த கற்குவேல் ( 20 ), ராஜபாண்டி ( 21 ), ஆகியோர் கத்தியால் சூரிய பிரபு மற்றும் அவரது உறவினர் வீரபுத்திரனை குத்தினாராம்.
இதில், காயம் அடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து தூத்துக்குடி தென்பாக்கம் காவல் ஆய்வாளர் சிவக்குமார் விசாரணை நடத்தி மூவரையும் கைது செய்தார்.