• vilasalnews@gmail.com

திருச்செந்தூர் கோயிலில் வேலை வாய்ப்பு... உடனே விண்ணப்பிங்க!

  • Share on

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் உதவி பொறியாளர், இளநிலை மின் பொறியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 14.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

உதவிப் பொறியாளர் (சிவில்)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : கட்டிடப் பொறியியலில் (B.E Civil) இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 36,700 – 1,16,200


இளநிலை மின் பொறியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 6

கல்வித் தகுதி : மின் பொறியியலில் பட்டயப்படிப்பு (Diploma in EEE) படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 35,900 – 1,13,500


மடப்பள்ளி

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். கோயிலின் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 11,600 – 36,800, 2 பணியிடங்களுக்கு தொகுப்பூதியம் ரூ. 6,000


திருவலகு

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : தொகுப்பூதியம் ரூ. 6,000

வயதுத் தகுதி : விண்ணப்பதாரர் 01.01.2024 அன்று 18 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://tiruchendurmurugan.hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினைப் பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.


முகவரி: இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர், தூத்துக்குடி. - 628215


விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.02.2024


இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://tiruchendurmurugan.hrce.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

  • Share on

தூத்துக்குடியில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

தூத்துக்குடியில் இருவருக்கு கத்திக்குத்து : 3 பேர் கைது

  • Share on