தூத்துக்குடி மேட்டுப்பட்டி சங்குகுளி காலனி பகுதியில் ஒரு வீட்டின் மீது பெட்ரொல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மேட்டுபட்டி சங்குகுளி காலணி பகுதியில் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர் அந்த பகுதியில் உள்ள சேது ராமன் என்பவரது வீட்டில் அவர் குடும்பத்தினருடன் தூங்கிகொண்டிருந்த வேலையில் 3-பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடி உள்ளனர்.
இதில் அதிர்ஷ்டவசிமாக சேதுராமன் மற்றும் அவரது மனைவி மற்றும் மகள் மற்றும் அவரது பேரன், பேத்தி ஆகிய குடும்பத்தினர் உயிர் தப்பினர். இது தொடர்பாக தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசி தப்பி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்,போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடந்த 20-நாட்களுக்கு முன்பு மேட்டுபட்டி சங்குகுளி காலனி பகுதியில் உள்ள சேதுராமன் உறவினர் வீட்டில் உள்ள பெண்ணிடம் கஞ்சா போதையில் சிலர் தகராறு செய்ததாகவும் அதனை சேதுராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் தட்டி கேட்டதால் அந்த பகுதியை சார்ந்த சிலருக்கும் சேதுராமன் குடும்பத்தினருக்கும் முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடைபெற்று வருகின்றது.