• vilasalnews@gmail.com

அம்மாடியோவ்.... தூத்துக்குடியில் சுமார் ரூ.94 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு... இன்றும் மட்டும் 15 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள்!

  • Share on

இன்றைய நவீன காலத்தில் மனிதனை ஒரு நாள் உணவு இல்லாமல் இருக்கச்சொன்னால் கூட இருந்திடுவான். ஆனால் ஆன்ட்ராய்டு போன் இல்லாமல் இருக்கச் சொன்னால், "வாய்ப்பில்லை ராஜா... வாய்ப்பில்லை" என்று தான் பதில் வரும். அந்த அளவிற்கு மனிதனின் வாழ்க்கையில் பிரிக்கமுடியாத ஒன்றாக மாறியுள்ளது செல்போன்கள். 

அப்படி பிரிக்கமுடியாததாக விளங்கி வரக்கூடிய இத்தகைய செல்போன்கள், சில சந்தர்ப்பங்களில் தவற விட்டும், திருடப்பட்டும் போன 15 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்களை கண்டு பிடித்து உரிமையாளர்களிடம் ஒப்படைத்து சபாஷ் வாங்கி இருக்கிறது தூத்துக்குடி மாவட்ட காவல் துறை.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாலாஜி சரவணன், தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன்  மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சுதாகர், அச்சுதன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து விரைந்து நடவடிக்கை எடுத்து செல்போன்களை மீட்க உத்தரவிட்டார்.

அதன்படி மேற்படி சைபர் குற்றப்பிரிவு தனிப்படையினர் செல்போன்கள் எங்கெங்கு உள்ளன என்பதை அதன் ஐ.எம்.இ.ஐ (IMEI) எண்ணை வைத்து கண்டு பிடித்து, சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தெரிவித்து அவற்றை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர்களிடம் ஏற்கனவே மொத்தம் 775 செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


தற்போது சைபர் கிரைம் குற்ற பிரிவு தனிப்படையினர் இதனை கண்காணித்து துரிதமாக செயல்பட்டு ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்களை கண்டு பிடித்து, அவற்றை பறிமுதல் செய்து இன்று (18.01.2024) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் ஒப்படைத்தார்.

மேலும் இதுவரை ரூபாய் 94,50,000 மதிப்புள்ள 875 காணாமல் போன் செல்போன்களை தொழில்நுட்ப ரீதியாக கண்டுபிடித்த சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய போலீசாரை பாராட்டினார்.

இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னி கிருஷ்ணன், காவல் ஆய்வாளர் சிவசங்கரன், உதவி ஆய்வாளர்கள் அச்சுதன், சுதாகரன் உட்பட சைபர் குற்றப் பிரிவு காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.

  • Share on

வேம்பாரில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தாருக்கு விளாத்திகுளம் எம்எல்ஏ நேரில் சென்று ஆறுதல்

தூத்துக்குடியில் இணையதளங்களில் வரும் போலியான வெளிநாடு ஏற்றுமதி விளம்பரங்கள், பகுதி நேர வேலை மற்றும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி... ரூ.13,36,530 பணம் மீட்பு!

  • Share on