இந்திய சுதந்திர போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 84 வது நினைவுதினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்,பல்வேறு தரப்பினர் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
வ.உ.சி அவர்களின் 84 வது நினைவு தினம் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து , இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், ஆங்கிலேயரை எதிர்த்து முதன்முதலாக கப்பலோட்டிய தமிழருமான, “செக்கிழுத்த செம்மல்” வ. உ. சிதம்பரனாரின் நினைவு தினத்தை ( 18 நவம்பர் 1936 ) முன்னிட்டு இன்று, தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் வ.உ.சி.நினைவு இல்லத்தில் சுதந்திரப் போரட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதிமுக
தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள வ.உ. சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கு தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந் நிகழ்சியில், மாவட்ட அவைத் தலைவர் வக்கீல் திருப்பாற் கடல்,மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் வக்கீல் முள்ளக்காடு செல்வகுமார், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஏசாதுரை, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வக்கீல் வீரபாகு, மாவட்ட மகளிரணி செயலாளர் குருத்தாய், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பாரதிய ஜனதா கட்சி
வ.உ.சிதம்பரனாரின் 84 வது நினைவு நாளை முன்னிட்டு ஒட்டப்பிடாரத்தில் உள்ள நினைவு இல்லத்தில் அவரது சிலைக்கு வடக்கு மாவட்ட பிஜேபியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், வடக்கு மாவட்ட தலைவர் போத்திஸ் ராமமூர்த்தி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் கிஷோர் குமார், சரவண கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் அமுதா கணேசன், வீரமணி, அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் சரவணன், ஓ.பி.சி அணி மாவட்ட பொதுச்செயலாளர் சரவணகுமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மண்டல தலைவர்கள் உட்பட பலர் மரியாதை செலுத்தினர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்
தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் திருவுருவச் சிலைக்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந் நிகழ்ச்சி, அமைப்புச் செயலாளர் இரா.ஹென்றிதாமஸ்,தெற்கு மாவட்ட செயலாளர் மனோகரன்,மாநில வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் புவனேஸ்வரன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்து முன்னணி
தூத்துக்குடி மாநகர மாவட்ட இந்து முன்னணி மற்றும் இந்து இளைஞர் முன்னணி சார்பாக வ.உ.சிதம்பரனாரின் 84வது குருபூஜை முன்னிட்டு பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வஉசியின் திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து கிரீடம் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்து முன்னணி நிர்வாகி பி.முத்துராஜ் தலைமை வகித்தார். ஜே.ஜோதிபாஸ் முன்னிலை வகித்தார். நெல்லை கோட்ட இந்து இளைஞர் முன்னணி பொறுப்பாளர் கேஎஸ் ராகவேந்திரா, மற்றும் மாதவன், முரளிதரன், சிவலிங்கம் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.