• vilasalnews@gmail.com

வேம்பாரில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தாருக்கு விளாத்திகுளம் எம்எல்ஏ நேரில் சென்று ஆறுதல்

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேம்பார் கிராமத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 2-ம் வகுப்பு படித்து வந்த 8 வயது சிறுவன் சில தினங்களுக்கு முன்பு கழுத்து, கை, வயிற்றுப்பகுதியில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

இதனையடுத்து, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் இன்று அச்சிறுவனின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்கள்.

அப்போது, விளாத்திகுளம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, தூத்துக்குடி வடக்கு மாவட்டம் முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், வேம்பார் ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் செந்தூர்பாண்டியன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர்கள் பெப்பின் காகு, மரிய சிங்கம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராமசுப்பிரமணியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் எப்ரோமீனா மேரி சூரங்குடி கிளைச் செயலாளர் சடையாண்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

  • Share on

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை..முதல்வர் ஸ்டாலின் கவனிப்பாரா?

அம்மாடியோவ்.... தூத்துக்குடியில் சுமார் ரூ.94 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு... இன்றும் மட்டும் 15 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள்!

  • Share on