கயத்தாறு அருகே ஓடும் லாரில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு டிரைவர் உயிரிழந்தார்.
கேரளாவில் இருந்து சிவகாசிக்கு ரப்பர் ஷீட்களை ஏற்றி வந்த லாரியை கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் குமார் (65), என்பவர் ஓட்டி வந்தார். இந்த லாரி நேற்று இரவு கயத்தாறு டோல்கேட் அருகே வரும் போது டிரைவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் லாரியை சாலையோரத்தில் நிறுத்தியுள்ளார்.
லாரி அந்த பகுதியில் நீண்ட நேரமாக நின்றதால் சுங்கச்சாவடி பணியாளர்கள் பார்த்த போது டிரைவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்து கயத்தார் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.