தூத்துக்குடியில், நாளை (ஜன.19) வெள்ளிக்கிழமை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடை பெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:-
தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில், பல தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
10-ம் வகுப்பு, பிளஸ்-2, பட்டப் படிப்பு, பி.இ., டிப்ளமோ, ஐ.டி.ஐ, டிரைவர், கணினிப் பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் பங்கேற்கலாம். விருப்பமுள்ளோர் சுயவிவரக் குறிப்பு, கல்விச் சான்றுகளுடன் பங்கேற்கலாம். இதில், பணி வாய்ப்பு பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுமூப்பு ரத்து செய்யப்படாது. தனியார் நிறுவனத்தினரும் பங்கேற்று தங்களுக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்யலாம் என்று கூறி உள்ளார்.