தூத்துக்குடியில் குடோனில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள உரத்தை கடத்தியது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் கார்த்திகேய பிரபு (52). ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இவருக்கு சொந்தமான குடோனில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள ராக் பாஸ்பேட் உரங்களை மர்ம நபர்கள் லாரியில் கடத்திச் சென்றுவிட்டார்களாம்.
இதுகுறித்து அவர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் கடம்பூர் அருகேயுள்ள இளவேளங்கால் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் ஆனந்தகுமார் (24) என்பவரை கைது செய்து உரங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய 4பேரை போலீசார் தேடி வருகின்றனர்.