• vilasalnews@gmail.com

எம்ஜிஆர் சிலைக்கு எட்டயபுரம் அதிமுகவினர் மரியாதை

  • Share on

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 107 வது  பிறந்தநாளை முன்னிட்டு, எட்டயபுரத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 107 வது  பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சண்முகா நகரில்  அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு, முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ - வின் ஆலோசனையின் பேரில், எட்டயபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதில் அவைத்தலைவர் கணபதி, அதிமுக வார்டு செயலாளர்கள் கருப்பசாமி, சிவா, பிரபு, செல்வி, சாந்தி, சின்னத்துரை, மோகன், பாரதி, சீனா என்ற முத்துகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி வேலுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி அருகே பைக் எரிப்பு : 3 போ் கைது

தூத்துக்குடியில் குடோனில் இருந்து உரம் கடத்தல் : ஒருவர் கைது... 4 பேருக்கு வலைவீச்சு

  • Share on