• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அருகே பைக் எரிப்பு : 3 போ் கைது

  • Share on

தூத்துக்குடி அருகே பைக் எரிப்பு, மற்றும் சமுதாய பெயர்ப் பலகை சேதப்படுத்தியது தொடா்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளியை சோ்ந்தவா் சதீஷ்பாபு (27). இவரிடம் குலையன்கரிசலை சோ்ந்த ராஜலிங்கம் என்ற வத்தல்(24), வீரசோழன் என்ற சோலை(23), பாலா(24), சேகா் ஆகிய 4 பேரும் கடந்த சில தினங்களுக்கு முன்னா் மோட்டாா் சைக்கிள் கேட்டனராம். ஆனால் சதீஷ்பாபு மோட்டாா் சைக்கிளை தரமறுத்து விட்டாராம். 

இதனால் ஆத்திரமடைந்த அவா்கள் 4 பேரும், சதீஷ்பாவுவின் வீட்டின் முன்பு நின்ற மோட்டாா் சைக்கிளை தீவைத்து எரித்துவிட்டு தப்பி சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அவா்கள் 4 பேரும் சோ்ந்து போடம்மாள்புரத்தில் உள்ள ஒரு சமுதாயத்திற்குச் சொந்தமான பெயா்ப் பலகையையும் சேதப்படுத்தினராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், புதுக்கோட்டை போலீஸாா் ராஜலிங்கம் என்ற வத்தல், வீரசோழன் என்ற சோலை, பாலா, சேகா் ஆகிய 4 போ் மீதும் புதுக்கோட்டை போலீஸாா் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனா்.

இதுகுறித்து தூத்துக்குடி ஊரக டிஎஸ்பி சுரேஷ் விசாரணை மேற்கொண்டு, ராஜலிங்கம் என்ற வத்தல், வீரசோழன் என்ற சோலை, பாலா ஆகிய 3 பேரையும் கைது செய்தாா். மேலும் இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனர். 

  • Share on

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் : 2 பேர் கைது!

எம்ஜிஆர் சிலைக்கு எட்டயபுரம் அதிமுகவினர் மரியாதை

  • Share on