ஜெயிலிலிருந்து கொலை வழக்கு விசாரணை கைதி தூத்துக்குடி கோர்ட்டிற்கு கொண்டுவரப்பட்ட போது கழிப்பறைக்கு செல்வதாக கூறி தப்பி ஓடிய நிலையில் அவனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் பாலடைந்த கட்டிடத்தின் மாடியில் கடந்த 2022 ஆம் ஆண்டு பிரபு என்பவர் கழுத்துறுத்து கொலை செய்யப்பட்டார். பிரபுவை அவரது நண்பர்களே மது குடிக்க அழைத்துச் சென்று கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் தூத்துக்குடி சண்முகபுரத்தைச் சேர்ந்த செல்வ சதீஷ் ( 25 ) இசக்கி ராஜா, ஜெயக்குமார் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். நான்கு பேரும் ஜெயிலில் இருந்தனர். இவ்வழக்கு விசாரணை தூத்துக்குடி கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கொலை வழக்கு விசாரணைக்காக பேரூரணி ஜெயிலில் இருந்து செல்வ சதீஷ் கடந்த 9ம் தேதி தூத்துக்குடிக்கு மற்ற கைதிகளுடன் பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டார். செல்வ சதீஷ் பாதுகாப்பிற்கு ஆயுதப்படை பெண் போலீஸ் மற்றும் ஒரு போலீஸ்காரர் சென்றனர். கோர்ட்டில் இருந்த செல்வ சதீஷ் கழிப்பறைக்கு செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார். அவரை கழிப்பறைக்குள் அனுப்பிவிட்டு வெளியில் போலீசார் காத்திருந்தனர். வெகு நேரமாகியும் கதவு திறக்காததால் போலீசார் கழிப்பறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது செல்வ சதீஷ் தப்பியது தெரிந்தது. கழிப்பறை ஜன்னலின் கண்ணாடி சொருகி வைக்கப்பட்டிருந்த கண்ணாடியை எடுத்துவிட்டு ஜன்னல் வழியை ஏறி குதித்தது செல்வ சதீஷ் தப்பியது தெரிந்தது. மேலும், அவருடன் சேர்ந்து அவரது மனைவியையும் கூப்பிட்டு தப்பியோடிவிட்டார்.
இதனையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உதவி ஆய்வாளர் ராஜபிரபு தலைமையிலான தனிப்படையினர் இன்று கோவை மாவட்டத்தில் வைத்து விசாரணை கைதி செல்வ சதீஷ் கைது செய்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.