தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியார்புரம் பகுதியில் இன்று நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி 49 வது வார்டுக்கு உட்பட்ட 3 சென்ட் அந்தோணியார்புரம் பகுதியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் திமுக வட்ட செயலாளர் மூக்கையா தலைமை வகித்தார்.
இவ்விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்பித்தார்.
விழாவில் மாமன்ற உறுப்பினர்கள் வைதேகி, ஜெயசீலி, விஜயலட்சுமி, சரவணகுமார், ராஜதுரை, பட்சிராஜன் மாமன்ற உறுப்பினரும் பகுதி செயலருமான ராமகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினரும் மண்டல தலைவரும் பால குருசாமி, வட்ட செயலாளர்கள் சுரேஷ், சுப்பையா, சரவணன், வட்ட பிரதிநிதி கல்யாணி மற்றும் மகளிர் அணியினர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.