• vilasalnews@gmail.com

அவர் மகாராணி போல் செயல்படுகிறார்... பதவியை ராஜினாமா செய்கிறேன்... அமைச்சர் கீதா ஜீவன் மீது திமுக நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு!

  • Share on

திமுக வட்டச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ததாக கீதா செல்வ மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி 39 வது திமுக வட்ட  செயலாளராகவும், மேலூர் பத்திரகாளியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராகவும்  இருந்து வந்தார் கீதா செல்வ மாரியப்பன். இவர் காவல்துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்.

இந்த நிலையில் கீதா செல்வ மாரியப்பனை மேலூர் பத்திரகாளியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பதவியில் இருந்து நீக்கி அறநிலைத் துறை உத்தரவிட்டது.


இதனையடுத்து, அமைச்சர் கீதா ஜீவன் தன் மீது வந்த புகாரை சரியாக விசாரிக்காமல் நீக்கிவிட்டார். என்னைப் போன்ற ஆரம்பகால திமுக உறுப்பினர்களை உரிய மரியாதை கொடுக்காமல் ஒருமையில் கீதாஜீவன் பேசியிருக்கிறார்.  

என்னைப் போன்ற கட்சிக்காரர்கள் அவரைப் பார்க்கச் சென்றாள், அவர் மகாராணி போன்று உட்கார்ந்து கொண்டு எங்களை உட்காரக்கூடச் சொல்லாமல் நிற்க வைத்து பேசி வருகிறார். இதனால் அவர் மாவட்டச் செயலாளராக இருக்கும் வரை அவர் கீழ் கட்சியில் பணிபுரிய விருப்பமில்லை. தனது 39 வது வட்ட செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக கீதா மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சி அமைச்சர் மீது கட்சி நிர்வாகி ஒருவர் கூறிய இந்த குற்றச்சாட்டால் உள்ளூர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share on

மேயர் ஜெகன் பெரியசாமியின் ஓய்வறியா உழைப்பில் தூத்துக்குடி மாநகராட்சி 2வது இடம்!

தூத்துக்குடியில் சமத்துவ பொங்கல் விழா : அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு

  • Share on