• vilasalnews@gmail.com

மேயர் ஜெகன் பெரியசாமியின் ஓய்வறியா உழைப்பில் தூத்துக்குடி மாநகராட்சி 2வது இடம்!

  • Share on

தேசிய அளவிலான தூய்மைக் கணக்கெடுப்பு ஸ்வச் சர்வேக்ஷன் 2023-ல் தூத்துக்குடி மாநகரம் 2வது இடம் பிடித்துள்ளது.

இது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில் தேசிய அளவிலான தூய்மைக் கணக்கெடுப்பு ஸ்வச் சர்வேக்ஷன் 2023-ல், ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 29 நகரங்களில் திருச்சி மாநகரம் மாநில அளவில் முதலிடத்தையும் இரண்டாம் இடத்தை தூத்துக்குடி மாநகரமும் பெற்றுள்ளது. 

இதற்காக ஊக்கப்படுத்திய   அமைச்சர் கே.என்.நேரு, கழக துணை பொது செயலாளரும் பாரளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, உடனிருந்த கீதாஜீவன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன், உறுதுணையாக இருந்த மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாநகர மக்களுக்கும், துணை மேயர், மண்டல தலைவர்களுக்கும், 

மாமன்ற உறுப்பினர்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் , தன்னார்வலர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் வருங்காலங்களிலும் மாநகர மக்கள் குப்பை பிரித்துக் கொடுத்து தூய்மையான தூத்துக்குடியாக விளங்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சியின் இது போன்ற சாதனைகளுக்கு, மேயர் ஜெகன் பெரியசாமியின் ஓய்வறியா உழைப்பே பிரதான காரணம் என பாராட்டு மகுடம் சூட்டுகின்றனர் தூத்துக்குடி மாநகராட்சி மக்கள்.

  • Share on

தூத்துக்குடியில் பிறந்து, கோயம்புத்தூரில் படித்து.. இன்று ரூ.2.70 லட்சம் கோடிக்கு அதிபதி!

அவர் மகாராணி போல் செயல்படுகிறார்... பதவியை ராஜினாமா செய்கிறேன்... அமைச்சர் கீதா ஜீவன் மீது திமுக நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு!

  • Share on