பிடிப்பும், விடாமுயற்சியும் இருந்தால் எதை வேண்டுமானாலும் சாத்திக்க முடியும் என்பதறப்கு இவர் முக்கியமான உதராணம். படித்தது, பிறந்தது எல்லாம் தமிழ்நாட்டில். ஆனால் வேலை, பிஸ்னஸ் எல்லாம் வட இந்தியாவில். ஆனா இப்போது 60 நாடுகளில் பிஸ்னஸ் செய்து வரும் மாபெரும் தொழிலதிபர்.
ஷிவ் நாடாருக்கு சொந்த ஊர் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம். கோயம்புத்தூரில் உள்ள பிஎஸ்ஜி காலேஜ் ஆப் டெக்னாலஜியில் இஞ்சினியரிங் பட்டப்படிப்பை முடித்தார்.
1967 ஆம் ஆண்டில் ஷிவ் நாடார், வால்சந்த் குரூப்பில் முதன் முதலில் வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் 1976 ஆம் ஆண்டில் ஹெச்சிஎல் நிறுவனத்தை அவர் ரூ.1,87,000 முதலீட்டில் தொடங்கினார்.
இந்தியாவின் பெரும் தொழிலதிபராக இருப்பது மட்டும் அல்லாமல் நாட்டின் மிகப் பெரிய நன்கொடையாளர்களில் ஒருவராகவும் ஷிவ் நாடார் உள்ளார். அவர் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஷிவ் நாடார் பவுண்டேனுக்கு நன்கொடையாக அளித்துள்ளார்.
டெல்லியின் டாப் பணக்காரரும் நாட்டின் மூன்றாவது பெரிய பணக்காரரும் ஆன ஷிவ் நாடாரின் நிகர சொத்து மதிப்பு போர்ப்ஸ் கணிப்பின்படி ரூ.2,43,746.70 கோடி ஆகும். ஷிவ் நாடார் தனது ஐந்து நண்பர்களுடன் சேர்ந்து தனது வீட்டு கேராஜில் ஹெச்சிஎல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
ஹெச்சிஎல் நிறுவனத்தை ஷிவ் நாடார் ஆரம்பித்தபோது தொடக்கத்தில் அது கால்குலேட்டர்கள் மற்றும் மைக்ரோ பிராசஸர்களை மட்டுமே தயாரித்தது. அதன் பின்னர் நாட்டின் மிகப் பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்தது. ஹெச்சிஎல் நிறுவனத்தின் தற்போதைய ஆண்டு வருவாய் 11.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
அந்த நிறுவனத்தை அவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வகித்து வந்தார். பின்னர் நிறுவனத்தின் தலைவர் என்ற பொறுப்பில் இருந்து விலகி அதை தனது மகள் ரோஷணி நாடாருக்கு விட்டுக் கொடுத்தார்.
இந்தியாவின் மிகப் பெரும் பணக்காரப் பெண்மணிகளில் ரோஷிணி நாடாரும் ஒருவர். அவரது நிறுவனம் இப்போது 60 நாடுகளுக்கும் மேல் கிளை விரித்து 2,22,000 ஊழியர்களைக் கொண்டுள்ளது.
ஹருண் 2022 ஆம் ஆண்டு பட்டியலில் இந்தியாவின் மிகவும் தாராளமான மனிதராக இடம் பெற்றுள்ளார். ஷிவ் நாடார் இதுவரை ரூ.1161 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார். இது ஒரு நாளைக்கு ரூ.3 கோடி என்ற கணக்காகும்.
ஐடி துறையில் ஷிவ் நாடார் ஆற்றிய பங்கைப் பாராட்டும் விதமாக மத்திய அரசு 2008 ஆம் ஆண்டில் அவருக்கு பத்ம பூஷண் விருதை வழங்கி கௌரவித்தது. ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவராக ஷிவ் நாடாரின் மகள் ரோஷிணி நாடார் தற்போது உள்ளார்.
ஷிவ் நாடார் மகளின் சொத்து மதிப்பு ரூ.84,330 கோடி ஆகும். போர்ப்ஸ் கணிப்பின்படி ஷிவ் நாடாரின் சொத்து மதிப்பு ரூ.2,43,746.70 கோடி ஆகும். ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் தற்போது வெற்றிகரமாக செயல்படுவதற்குக் காரணம் ஷிவ் நாடாரின் கடுமையான உழைப்பாகும்.