தூத்துக்குடியில் நடைபெற்ற அகில இந்திய பெரிய துறைமுகங்களுக்கு இடையேயான கூடைப்பந்து இறுதி போட்டியில் வஉசி துறைமுக அணி வெற்றி பெற்றது.
அகில இந்திய பெரிய துறைமுகங்களுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி தூத்துக்குடி வஉசி துறைமுக மைதானத்தில் கடந்த 9ம் தேதி துவங்கியது. இதில் தூத்துக்குடி, சென்னை,கொல்கத்தா, ஒரிசா பாரதீப், விசாகப்பட்டினம் உள்ளிட்ட 5 துறைமுகங்களைச் சார்ந்த அணிகள் கலந்து கொண்டன. 3 நாட்கள் மின்னொளியில் நடைபெற்ற இப்போட்டியின் இன்று நடைபெற்ற இறுதி போட்டியை துறைமுக உயர் கணக்கு அதிகாரி சாகு துவக்கி வைத்தார்.
இறுதி போட்டியில் தூத்துக்குடி வஉசி துறைமுக அணியும், ஒரிசா பாரதீப் துறைமுக அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 69 : 38 புள்ளிகள் எடுத்து தூத்துக்குடி வஉசி துறைமுக அணி - ஒரிசா பாரதீப் துறைமுக அணியை வென்று வெற்றிக் கோப்பையை தட்டி சென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு தூத்துக்குடி சுங்கத்துறை ஆணையர் விகாஷ் நாயர் கலந்து கொண்டு கோப்பைகளையும் பரிசுகளையும் வழங்கி பாராட்டினார்.