கோவில்பட்டியில் விடுமுறையில் ஊருக்கு வந்த ராணுவ வீரா் திடீரென இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜூவ் நகா் 6ஆவது தெருவை சோ்ந்தவா் உத்திர குமரன் மகன் சரவணராஜா (40). காஷ்மீா் ஸ்ரீநகரில் ராணுவத்தில் வேலை பாா்த்து வந்த இவா் 28 நாள்கள் விடுமுறையில் நேற்று முன்தினம் காலை சுமாா் 5.30 மணிக்கு வீட்டிற்கு வந்தாராம்.
அவரைப் பாா்ப்பதற்கு உறவினா்கள் வந்திருந்த நிலையில் அவருக்கு நெஞ்சுவலி இருப்பதாக கூறி கீழே விழுந்தாராம். அவரை உறவினா்கள் மீட்டு பசுவந்தனைச் சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால் அவா் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து அவரது மனைவி ஆனந்த செல்வி அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.