கோவில்பட்டி அருகே மயானத்திற்கு பாதை இல்லை என்று கூறி சாலை நடுவே மூதாட்டி உடலை வைத்து கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள சுப்பிரமணியபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் ஜம்புலிங்கபுரம். இந்த கிராமத்தினை சேர்ந்த முதியவர் தர்மராஜ், மூதாட்டி வள்ளியம்மாள் ஆகியோர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், அங்குள்ள மயானத்திற்கு கொண்டு செல்ல பாதை இல்லை என்றும், பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மூதாட்டி வள்ளியம்மாள் உடலை கழுகுமலை - கயத்தாறு சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.