• vilasalnews@gmail.com

வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளத்தில் 19.01.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிஅளவில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பல தனியார் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.இ., டிப்ளமோ, ஐ.டி.ஐ டிரைவர் மற்றும் கணினி பயிற்சி கல்வித்தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்துகொள்ளலாம்.

மேற்கண்டதகுதியுள்ள, தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளுடன் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தனியார்துறை நிறுவனங்களில் பணிநியமனம் செய்யப்படும் நேர்வில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது. தனியார் நிறுவனத்தினர் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய இம்முகாமில் கலந்து கொள்ளலாம் எனவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் சமந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியது ஏன்? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

இந்திய விமான நிலைய ஆணையத்தில் பணியிடங்கள் : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!

  • Share on