குளத்தூர் அரசு ஆரம்ப சுகாதர நிலைய வளாகத்தில் பேவர் பிளாக் தளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டினார்.
குளத்தூர் மக்களின் தொடர் மற்றும் நீண்ட நாள் கோரிக்கையான, குளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், பேவர் பிளாக் தளம் அமைப்பதற்கு , சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் ஒதுக்கீடு செய்து, அதற்கான, அடிக்கல் நாட்டு விழா இன்று ( 20.1.2020 ) குளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டினார். விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன், குளத்தூர் ஆரம்ப சுகாதர நிலைய தலைமை மருத்துவர் முத்துராஜ், மாவட்ட கவுன்சிலரும் ஒன்றியச் செயலாளருமான நடராஜன், ஊராட்சி மன்ற தலைவர் மாலதி செல்வபாண்டி, ஒருங்கிணைந்த வேளாண் விற்பனைகுழு உறுப்பினரும், மாவட்ட பிரதிநிதியுமான செண்பகப்பெருமாள்,
ஒன்றிய கவுன்சிலர் குருநாதன், ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலாளர் போடுசாமி, மேற்கு ஒன்றிய துணை செயலாளர் பிச்சைமணி உள்ளிட்ட கழக நிர்வாகிகள், மருத்துவர்கள், சுகாதார அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.