வேம்பாரில் ரத்த வெள்ளத்தில் சிறுவன் இறந்து கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் சிந்தாமணி நகர், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் அபிஷேக் குமார் (9), அங்குள்ள பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வருகின்றான். இன்று காலை அப்பகுதியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் அபிஷேக் குமார் திடீரென ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தான். அவரது கழுத்தில் ரத்தக்காயம் இருந்தது.
சிறுவர்களிடையே ஏற்பட்ட தகராறில் அவரை யாரேனும் கத்தியால் வெட்டிக் கொலை செய்தார்களா? அல்லது தவறி விழுந்ததில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தாரா என்பது குறித்து சூரங்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனின் உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.