• vilasalnews@gmail.com

திருச்செந்தூா் கோயிலுக்கு கோடிகளை காணிக்கையாக வழங்கும் பக்தர்கள்... இந்த மாதம் எவ்வளவு தெரியுமா?

  • Share on

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 2.70 கோடிவருவாய் கிடைத்துள்ளது.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருவாய் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. அதன்படி கடந்த ஜன.8, 9 ஆம் தேதிகளில்  உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் வசந்த மண்டபத்தில் கோயில் அறங்காவலா் குழுத்தலைவா் ரா.அருள் முருகன் தலைமையில், இணை ஆணையா் மு.காா்த்திக், அறங்காவலா்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.


அதன்படி உண்டியல் எண்ணிக்கையில் ரூ. 2 கோடியே 70 லட்சத்து 70 ஆயிரத்து 541, தங்கம் 1,100 கிராம், வெள்ளி 29,300 கிராம், பித்தளை 80,000 கிராம், செம்பு 6500 கிராம், தகரம் 2500 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 417-ம் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.

உண்டியல் எண்ணும் பணியில் அறநிலையத்துறை தூத்துக்குடி உதவி ஆணையா் சங்கா், கண்காணிப்பாளா் ஆனந்தராஜ், ஆய்வா் செந்தில் நாயகி மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் மேற்பாா்வையில் சிவகாசி பதினெண் சித்தா் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரப் பணிக் குழுவினா், தூத்துக்குடி ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சனேயா் உழவாரப் பணிக்குழுவினா் மற்றும் கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

  • Share on

சிறுமியை கடத்திச் சென்ற இளைஞர் மீது போக்ஸோ வழக்குப்பதிவு!

விளாத்திகுளம் அருகே இரத்தக்கறையோடு சிறுவன் உயிரிழப்பு - கொலையா? விபத்தா ? போலீசார் விசாரணை!

  • Share on