கோவில்பட்டி அருகே 16 வயது சிறுமியை கடத்திச் சென்ற இளைஞர் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே 16 வயது சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோா் டிச. 22 ஆம் தேதி அளித்த புகாரின் பேரில் கொப்பம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து சிறுமியை தேடி வந்தனா். இந்நிலையில் அந்த சிறுமியையும், அவரைக் கடத்திச் சென்றதாக தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சோ்ந்த இ. கனிராஜ் (24) என்பவரையும் போலீசார் நேற்று முன்தினம் மீட்டனா்.
இதுகுறித்து அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கனிராஜ் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.