வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில், தூத்துக்குடியில் பெருந்தலைவர் காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தனபாலனை வேட்பாளராக நிறுத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கூட்டணியை தலைமை பார்த்துக் கொள்ளும், தேர்தல் பணிகளில் வேகம் காட்டுங்கள் என்று கட்சியினருக்கு பொதுச்செயலாளர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
ஜெயலலிதா பாணியில், மற்ற கட்சிகளுக்கு முன்னதாக வேட்பாளர்களை முதலில் அறிவிக்க திட்டமிட்டுள்ள பழனிச்சாமி, உத்தேச பட்டியலை தயார் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
தென்காசி, தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் கூட்டணி கட்சி தலைவர்களான புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, பெருந்தலைவர் காமராஜர் மக்கள் கட்சித் தலைவர் தனபாலன் ஆகியோரை வேட்பாளராக நிறுத்த பழனிச்சாமி திட்டமிட்டுள்ளார். மற்ற தொகுதிகளுக்கான பட்டியல் தயார் நிலையில் இருந்தாலும், பாமக தேமுதிக தமாக ஆகிய கட்சிகள் வந்தால் வேட்பாளர்களை மாற்றிக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளார்.