• vilasalnews@gmail.com

தூத்துக்குடி எம்.ஜி.ஆர் நகரில் சாலை வசதி கோரி இந்து மக்கள் கட்சியினர் மனு

  • Share on

எம்ஜிஆர் நகர் பகுதிகளில் சாலை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி,  அப்பகுதி பொதுமக்கள் சார்பாக, இந்து மக்கள் கட்சியினர், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் அப்பகுதி தலைவர் அய்யாசாமி அளித்துள்ள மனுவில் :

தூத்துக்குடி மாநகரம், திருச்செந்தூர் சாலையில் உள்ள எம்ஜிஆர் நகர் பாலம் பகுதியில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் சரியான சாலை வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறோம்.

மழைக்காலங்களில், மழைநீர் வடிந்து செல்ல சரியான வடிகால் வசதி இல்லாத காரணத்தாலும், முறையான சாலை வசதி இல்லாத காரணத்தாலும், மழைநீர் தேங்கி மக்கள் பயன்படுத்தும் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் நோய் தொற்று பரவக்கூடிய அபாயம் ஏற்படுகிறது.

ஆகவே, எங்கள் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான முறையான சாலை வசதி அமைத்துத் தரும்படி கேட்டுக் கொள்கிறோம். என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வின் போது, இந்து மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் ராம குணசீலன், மாநில செயலாளர் வசந்த குமார், மாநில பூசாரி அமைப்பு பேரவை  சாஸ்தா மற்றும் பொது மக்கள் என 50 க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்.

  • Share on

விளாத்திகுளத்தில் புதிதாக நிறுவப்பட்ட 40 சி.சி.டி.வி கேமரா : எஸ்பி., ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

குளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பேவர் பிளாக் தளம் அடிக்கல் நாட்டு விழா - விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் பங்கேற்பு

  • Share on