அகில இந்திய பெரும் துறைமுகங்களுக்கு இடையே ஆன கூடைப்பந்து போட்டி தூத்துக்குடி துறைமுகத்தின் சார்பில் துறைமுக பள்ளி வளாகத்தில் நடக்கிறது.
ஜனவரி 9ம் தேதியான இன்று துவங்கும் இந்த போட்டிகள் வரும் 11ஆம் தேதி வரை நடக்கிறது இந்த போட்டியில் ஐந்து பெரும் துறைமுகங்களில் உள்ள அணிகள் கலந்து கொண்டு விளையாடுகிறது.
சென்னை, கொல்கத்தா, விசாகப்பட்டினம், பாரதீப் ( ஒரிசா ), தூத்துக்குடி வ.உ.சி துறைமுக அணிகள் பங்கேற்று விளையாடுகிறது. நெல்லை ஐ.என்.எஸ் கட்டபொம்மன் கமாண்டிங் ஆபிசர் நிஷாந்த் குமார் போட்டியை துவக்கி வைக்கிறார்.