• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு

  • Share on

தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று (ஜன.9) பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் ஆய்வு மையம் தெரிவித்தது. 

சென்னை வானிலை மையம் ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு: 

வடதமிழக கடலோரப் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை(ஜன.9) தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.

புதன்கிழமை(ஜன.10) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.

வியாழன் முதல் சனிக்கிழமை (ஜன.11-13) வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான முதல் பலத்த மழை பெய்யக்கூடும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: 

செவ்வாய், புதன்(ஜன.9-10) தமிழகக் கடலோரப் பகுதி மன்னாா் வளைகுடா, குமரிக் கடல் பகுதி, இலங்கை கடலோரப் பகுதி மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

தூத்துக்குடியில் ரேஷன் அரிசி பதுக்கல் : 2 போ் கைது

தூத்துக்குடியில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி இன்று துவக்கம்

  • Share on