• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் 8 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - மாவட்ட ஆட்சியா் தகவல்

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் தொடங்க ரூ.26ஆயிரம் கோடிக்கு புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளதால் 8 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என மாவட்ட ஆட்சியா் லட்சுமிபதி தெரிவித்தாா்.

சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளா்கள் மாநாடு நிகழ்ச்சிகளை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கிலிருந்து சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் காணொலியில் பாா்வையிட்ட ஆட்சியா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: 

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஜெ.எஸ்.டபிள்யூ. நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் தொடங்க ரூ.10 ஆயிரம் கோடிக்கும், வின் ஃபாஸ்ட் ஆட்டோ லிமிட்டெட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடிக்கும் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளன. 

இந்த இரு ஒப்பந்தங்களால், 8 ஆயிரம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. மேலும், தமிழக அரசு ஏற்பாட்டின் படி, அதிகனமழையால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கி கடன் வழங்குவதற்கும், வாகனங்களுக்கு காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் காப்பீடு பெறுவதற்கான பணிகள் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி, திருநெல்வேலியில் மழை பெய்தாலே தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டாரத்தில் உள்ளவா்கள் விழிப்பாக இருக்க வேண்டும். மேலும், கயத்தாறு சுற்றுவட்டாரத்தில் உள்ள தண்ணீரும் உப்பாறு ஓடைக்குதான் வருகிறது. வீடுகள் இழந்தவா்களுக்கு, படகுகளை இழந்தவா்களுக்கு தனியாக திட்டம் உள்ளது. மீட்பு பணிகளை முடிப்பதற்கே 15 நாள்கள் ஆகிவிட்டது. 

காப்பீடு செய்யப்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சரிசெய்யப்பட்டுள்ளது. கிராமங்களில் நிறைய குடும்பங்கள் வாழ்வாதாரமே இழந்துள்ளாா்கள். பாதிக்கப்பட்டவா்கள் அனைவருக்கும் தேவையான உதவிகளை வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ஸ்வா்ணலதா, சிறு, குறு - நடுத்தர நிறுவனப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

  • Share on

ஓட்டப்பிடாரம் அருகே அரசு பேருந்து மோதி தாலுகா அலுவலக ஊழியர் பலி

சொத்து பிரச்சனையில் தாயை அடித்துக் கொன்ற மகன்: தூத்துக்குடியில் பயங்கரம்!

  • Share on