ஓட்டப்பிடாரம் அருகே வடக்குப் பரம்பூரில் அரசு பேருந்து மோதி தாலுகா அலுவலக உதவியாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கடற்கரை மகன் வேல்முருகன் ( வயது 50 ) என்பவர் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றினார்.
இந்த நிலையில், நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் ஓட்டப்பிடாரத்தில் இருந்து புதியம்புத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வடக்கு பரும்பூர் அருகே சென்று கொண்டிருந்தபோது நாய் குறுக்கே வந்ததில் நிலை தடுமாறியதில், எதிரே தூத்துக்குடியில் இருந்து கந்தசாமிபுரம் நோக்கி சென்ற அரசு பேருந்து மீது மோதியதில் பலத்த காயமடைந்த வேல்முருகனை ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வேல்முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.