• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அருகே திமுக எம்எல்ஏ முன்பு இருதரப்பினர் மோதிக்கொண்ட சம்பவத்தால் பரபரப்பு

  • Share on

தூத்துக்குடி அருகே உள்ள ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனை மின்மோட்டார்கள் மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது.

தேங்கிய தண்ணீரை அகற்றினாலும் ஊற்று மூலம் மீண்டும் தண்ணீர் தேங்கும் பிரச்சனை உள்ளது. கடந்த 20 நாட்களாக இப்பிரச்சனையால் மக்கள் சிரமப்படுகின்றனர். தண்ணீரை அகற்றும் பணியை துரிதப்படுத்த கோரி ராமேஸ்வரம் சாலை, மதுரை சாலை போன்ற பகுதிகளில் மாப்பிள்ளை ஊராட்சியைச் சேர்ந்த மக்கள் அவ்வப்போது சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாப்பிள்ளையூரணி ஊராட்சியின் துணைத் தலைவராக தமிழ்ச்செல்வி உள்ளார். இவர் பாரதி நகரில் குடியிருந்து வருகிறார். அதன் அருகே உள்ள காமராஜர் நகர் பகுதியில் அதே பகுதியில் குடியிருக்கும் திமுகவைச் சேர்ந்த ஆனந்த், அவரது சகோதரர் மணி ஆகியோர் மழை நீர் அகற்றும் முயற்சியில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர்.

அவர்களிடம் அருகே உள்ள பாரதிநகர் மக்களும் மழைநீர் அகற்றக்கோரியதால் அதற்கான ஏற்பாடுகளையும் செய்தனர். அதற்கான டீசல் வாங்க சென்றபோது, பஞ்சாயத்து துணைத்தலைவர் தமிழ்ச்செல்வியின் கணவர் கணேசன், மகன் கலைச்செல்வன் ஆகியோர் ஆனந்த், மணியிடம், மழை நீரை நீங்கள் எப்படி அகற்றலாம்? என்று கூறி தகராறில் ஈடுபட்டு அவர்களை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து காயமடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதே போல் ஆனந்த், மணி ஆகியோர் தாக்கியதாக கணேசன்,  கலைச்செல்வனும் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.

இந்த மோதலில் ஆனந்த், மணி மீது தாளமுத்து நகர் போலீசார் வழக்கு பதிவு செய்ததாக கிடைத்த தகவலை அடுத்து காமராஜர் நகர் மக்கள் நேற்று காலை தாளமுத்து நகர் காவல் நிலையம் சென்றனர். பின்னர் ஊராட்சி மன்றம் அலுவலகத்திற்கு சென்று முற்றுகையிட்டனர். 

தகவல் அறிந்து ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா, மாப்பிள்ளை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு நேற்று மதியம் வந்து சமரச பேச்சில் ஈடுபட்டார்.  அப்போது இரு தரப்புக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். 

ஆளும் கட்சியான திமுக சட்டமன்ற உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர் கண்முன்னே இரண்டு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share on

தூத்துக்குடியில் பெய்த கனமழை வெள்ளத்தால் இப்படியாச்சு சார்... உடனே நிறைவேற்றி கொடுத்த எஸ்பி பாலாஜி சரவணன்!

ஓட்டப்பிடாரம் அருகே அரசு பேருந்து மோதி தாலுகா அலுவலக ஊழியர் பலி

  • Share on