தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தினர், தாமிரபரணி வெள்ளத்தின் தொடக்க நாட்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் உதவி புரிந்தனர். தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் உதவி புரிந்தனர். தொடர்ந்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு நிவாரண உதவிகள், அரிசி மளிகை பொருட்கள் வழங்கினர்.
ஸ்ரீவைகுண்டம் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணியின் இருகரைகளிலும் பாதிக்கப்பட்ட ஊர்களுக்கு சென்று பாதிப்பு விவரங்களை அறிந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க சென்றனர்.
இது குறித்து தாமிரபரணி பாதுகாப்பு இயக்க பொதுச் செயலாளர் ஐகோ கூறுகையில்:-
புன்னக்காயல் பகுதியில் சுமார் எட்டு மாதங்களுக்கு முன்பு ரூபாய் 64 கோடி மதிப்பில் மூன்று தடுப்பணைகள் கட்டப்பட்டன. அதில் புன்னக்காயில் பகுதியில் கட்டப்பட்ட தடுப்பணை முற்றிலும் உடைந்து சிதைந்து விட்டது. பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஏரல் பெரிய பாலம் எட்டு ஆண்டுகள் கூட தாக்குப் பிடிக்கவில்லை. இப்படி வேலை செய்யும் ஒப்பந்தகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்ப்பகுதி, நீர் புறம்போக்கு பகுதியில் அமைக்கப்படும் கட்டுமானங்களில் பழுது ஏற்பட்டால் அதை கண்காணித்த பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டும். அவர்களுக்கு மாற்று இடம் வழங்குவது அரசின் வசதியை பொறுத்தது. ஆனால் அப்புறப்படுத்த வேண்டியது சட்டப்படியும் நியாயப்படியும் தேவையானது. கலியாவூர் முறப்பநாடு சிலைகுண்டம் பகுதிகளில் மணல் கொள்ளை தொடங்கிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்