• vilasalnews@gmail.com

தூத்துக்குடிக்கு இன்று கனமழை எச்சரிக்கை : பாதுகாப்பான இடத்திற்கு செல்ல மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

  • Share on

தூத்துக்குடியை மீண்டும் மழை மிரட்டி வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று மழை பெய்தது. இன்று கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17,18 ஆம் தேதி பெய்த வரலாறு காணாத மழை, மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளை புரட்டி போட்டு விட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் அடியோடு முடங்கியது. இதிலிருந்து மக்கள் தற்போது தான் இயல்பு நிலைக்கு மெல்ல மெல்ல வந்து கொண்டு இருக்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். இந்த நிலையில் ஜனவரி 6 ஆம் தேதியான இன்று மாவட்டத்தில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாவட்டத்தில் நேற்று பரவலாக நல்ல மழை பெய்து வருவதாலும் இன்று ( ஜன.,6 ) தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மின்சாதன பொருட்களை கவனமாக கையாள வேண்டும். மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைப்பகுதியில் கலியாவூர் முதல் புன்னக்காயில் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரைப் பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விபரம்

வியாதிகளை தரும் நீராக மாறிய மழை நீர்... இந்த நிலை என்று மாறுமோ என்ற ஏக்கத்தில் மக்கள்... இது தூத்துக்குடி மாநகராட்சியின் அவலநிலை!

  • Share on