வைப்பார் கிராமத்தில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் கலந்து கொண்ட 7 ஜோடி காளைகளில் 4 ஜோடி காளைகள் வெற்றி வாகை சூடியது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா வைப்பார் கிராமத்தில் ராஜ கம்பள மகாஜன சங்கம் சார்பில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 265 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மூன்றாம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் இன்று ( ஜன.,4 ) நடைபெற்றது.
இதில் பெரிய மாடு, சின்ன மாடு, பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
முதலாவதாக நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 7 ஜோடி காளைகள் கலந்து கொண்டன. இதில் பெரிய மாட்டில் முதலாவது பரிசாக ஒரு லட்சத்து 1,11,265 ரூபாயை, சாரதி அங்குச்சாமி, பின்சாரதி சதீஸ் ஓட்டிய சண்முகபும் மெடிக்கல் பி.விஜயகுமாருடைய காளைகளும்,
இரண்டாவது பரிசாக 91,265 ரூபாயை சாரதி செல்வராஜ், பின்சாரதி பாலா ஓட்டிய சண்முகபும் மெடிக்கல் பி.விஜயகுமாருடைய காளைகளும்
மூன்றாவது பரிசாக 71,265 ரூபாயை வேலங்குளம் எம்.கண்ணனுடைய காளைகளும்,
நான்காவது பரிசாக 21,265 ரூபாயை அனியாபுரம் எஸ்கேஆர் மோகன்சாமிகுமாருடைய காளைகளும் தட்டிச்சென்றன.