• vilasalnews@gmail.com

வைப்பார் கிராமத்தில் மாட்டு வண்டி பந்தயம் - ஆவலுடன் பந்தய ரசிகர்கள்

  • Share on

தமிழர் பாரம்பரிய வீர விளையாட்டு போட்டிகளில், தென்மாவட்டத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்தது மாட்டு வண்டி எல்கை பந்தயம். இந்த மாட்டு வண்டி எல்கை பந்தயமானது, மதுரை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாத புரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெகு விமர்சையாகவும், ஆரவாரத்தோடும் நடக்கும்.

இந்த மாட்டு வண்டி பந்தயத்திற்கென தமிழ்நாட்டில் லட்சகணக்கான ரசிகர் பட்டாளமே உண்டு. போட்டி நடைபெறக்கூடிய சாலைகளில் இருபுறமும் ரசிகர்கள் நின்று ஆரவாரத்தோடு பந்தயத்தை கண்டு ரசிப்பார்கள். 


தமிழகத்தில் நடைபெறக்கூடிய இந்த மாட்டு வண்டி பந்தயங்களில் சில ஊர்களில் நடைபெறும் போட்டி பந்தய ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பையும், ஆவலையும் கொடுக்கும். ஏனென்றால், அந்த ஊர்களில் நடைபெறும் போட்டிகளில் தலைசிறந்த அனைத்து மாடுகளும், சாரதி மற்றும் பின் சாரதிகளும் கலந்து கொள்வார்கள்.

அந்த வரிசையில் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பையும், ஆவலையும் தரக்கூடிய வைப்பார் பந்தய களம் நாளை ( ஜன.,4 ) நடைபெற உள்ளது.


தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா வைப்பார் கிராமத்தில் ராஜ கம்பள மகாஜன சங்கம் சார்பில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 265 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மூன்றாம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நாளை ( ஜன.,4 ) நடைபெறுகிறது.

இதில் பெரிய மாடு, சின்ன மாடு, பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெறுகிறது. இதில் பெரிய மாட்டிற்கு முதலாவது பரிசாக ஒரு லட்சத்து 1,11,265 ரூபாயும் இரண்டாவது பரிசாக 91,265 ரூபாயும் மூன்றாவது பரிசாக 71,265 ரூபாயும் நான்காவது பரிசாக 21,265 ரூபாயும் வழங்கப்படுகிறது.

சின்ன மாட்டு வண்டியில் முதல் பரிசாக 51,265 ரூபாயும், இரண்டாவது பரிசாக 41,265 ரூபாயும், மூன்றாவது பரிசாக 31,265 ரூபாயும், நான்காவது பரிசாக 11, 265 வழங்கப்படுகிறது.

பூஞ்சிட்டு மாட்டுவண்டி பந்தயத்தில் முதல் பரிசாக 20,265 ரூபாயும், இரண்டாவது பரிசாக 15,265 ரூபாயும், மூன்றாவது பரிசாக 10,265 நான்காவது பரிசாக 5,265 ரூபாயும் வழங்கப்படுகிறது.


நாளை நடைப்பெறக்கூடிய வைப்பார் மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயத்தில் வெற்றிக்கொடி கட்டப்போவது யார் என்ற எதிர்பார்பில் பந்தய ரசிகர்கள் பட்டாளங்கள் இன்று இருந்து வரக்கூடிய சூழலில், இதற்கான விடை நாளை கட்டாயம் தெரியும்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை - மாவட்ட ஆட்சியர் தகவல்

தூத்துக்குடியில் நாளை ( ஜன.,4 ) தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

  • Share on