• vilasalnews@gmail.com

அலைபேசியில் அழைத்து எழுப்பியவர் மாவட்ட ஆட்சியர்... விருது பெற்ற கையோடு நினைவு கூறும் தூத்துக்குடி இளைஞர்

  • Share on

2022 ம் ஆண்டு கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவிய சூழலில் ஊரே அடங்கி இருந்தது. ஆனால் அடங்காமல் உயிரை பணயம் வைத்து ஒரு கூட்டம் மட்டும் மக்களுக்காக களத்தில் இருந்தது என்று சொன்னால் அதுதான் இந்திய மாணவர் சங்கம்.

தன்னார்வ பணிக்காக நாங்கள் தயாராக இருக்கிறோம் அரசு இயந்திரம் எங்களை பயன்படுத்தி கொள்ளவும் என்று குறுஞ்செய்தி ஒன்றை வாட்ஸ்அப் வாயிலாக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பினேனேன்.

மறுநாள் காலை தூங்கி கொண்டிருந்த என்னை அலைபேசியில் அழைத்து எழுப்பியவர் மாவட்ட ஆட்சியர் . உங்களுக்கான பணியை அரசு மருத்துவமனை முதல்வரிடம் கூறிவிட்டேன் உடனடியாக அவரை நேரில் சென்று பார்த்து பணியை துவங்குங்கள் என்றார் மாவட்ட ஆட்சியர். விவரத்தை வெகுஜன தலைவர்களிடம் கூறிவிட்டு அன்றே பணியை துவங்கினோம்.

மாரிச்செல்வம், கார்த்தி, ஜெரால்ட், அலெக்ஸ், ரோசன், விக்னேஷ், செல்வின், முத்துகல்யாணி, பிரியா, ஸ்னேகா, ஐசுவரியா, சதிஷ், கிஷோர், சதிஸ்குமார், கர்ணா, கோபால், ராமகிருஷ்ணன், அகிலேஷ், தரணியன், சுயம்பு, தினேஷ், நவீன், ஆகாஷ், ஸ்டீவர்ட், சுதிஸ், விஷ்வா, மூக்கையராஜ், பொன்மாரி, முரளி, இன்ஃபென்ட், விஷ்னு, ராஜா, மணி, அசோக் உள்ளிட்ட தோழர்கள் களமிறங்கினோம்.

1.காய்ச்சல் அறிகுறியோடு வருவோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வது, 

2.கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு இருக்குமிடம் சென்று உணவு வழங்குவது, 

3.கொரோனா தடுப்பூசி போட வருகிறவர்களின் விவரங்களை பதிவு செய்தல், 

4.அரசு மருத்துவமனைக்கு வருவர்களின் தேவையை அறிந்து அவர்களை வழிகாட்டுதல், 

5.கொரோனா இறப்பு விவரங்களை பதிவு செய்தல், 

6. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் உடல்நிலை குறித்து அவ்வப்போது உறவினர்களிடம் தெரிவித்தல்

7. தினமும் 3 வேளை கொரோனா வார்டில் காலியாக உள்ள படுக்கை வசதி குறித்து கணக்கெடுத்து மருத்துவர்களிடம் தெரிவித்தல் போன்ற பணிகளை 50 நாட்கள் நாங்கள் செய்தோம்.

எங்கள் பணியை பாராட்டும் விதமாக அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், வணிகர் சங்கம் குறிப்பாக மாவட்ட நிர்வாகம் பாராட்டு விழாக்களை நடத்தியது.

எங்களுடைய பணியை பாராட்டி எழுதாத ஊடகங்கள் இல்லை. அப்பேர்பட்ட பணியை சிறப்பாக மாணவர்களை ஒருங்கினைத்து செய்ததற்காக அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பாக சமூக மேம்பாட்டிற்கான இளைஞர் விருது எனக்கு கடந்த டிசம்பர 17ம் தேதி சென்னையில் வழங்கப்பட்டது .

இந்த நேரத்தில் என்னோடு பயணித்த அத்துனை நன்பர்களுக்கும், தம்பிகளுக்கும், வழிகாட்டிய தோழர்களுக்கும், அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், அரசு மருத்துவமனை முதல்வர் நேரு, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் டால்டன், கிரேசி, கர்லின், மாலையம்மாள், ஷண்முகபிரியா சுனிதா, தனலெட்சுமி, கண்ணன் சுகாதார ஆய்வாளர் இம்மானுவேல், Mass Ambulance தமிழ்செல்வன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி என தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார், மாவட்ட குழு உறுப்பினர்,  தூத்துக்குடி மாநகர தலைவர், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர், மாவட்ட தலைவர்,  மாவட்ட செயலாளர், மாநில குழு உறுப்பினர், மாநில செயற்குழு உறுப்பினர், மாநிலத் துணைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இந்திய மாணவர் சங்கத்தில் இருந்து செயல்பட்டு, அதில் இருந்து தன்னை விடுவித்திக்கொண்டு,  தற்போது இந்திய ஆட்சிப்பணி தேர்விற்கு தன்னை தயார் படுத்தி வரும் ஜாய்சன்.

  • Share on

தூத்துக்குடியில் இருந்து போக விரும்பாததால் வேதாந்தா நிறுவனம் இதை செய்கிறது!

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை - மாவட்ட ஆட்சியர் தகவல்

  • Share on