• vilasalnews@gmail.com

உங்கள் வீட்டில் 9 மாதம் முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகள் இருக்காங்களா? அப்படினா இதை தெரிஞ்சுகோங்க!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் மழைக்காலங்களில் ஏற்படும் தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய்களை தடுக்கும் பொருட்டு 9 மாதம் முதல் 15 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி ஜனவரி 2ம்தேதி முதல் ஜனவரி 13.1.24 தேதிவரை செலுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் 9 மாதம் முதல் 15 வயதுவரையுள்ள சுமார் 2,90,000 குழந்தைகள் பயன் அடைவார்கள். இத்தடுப்பூசி மாவட்டத்தில் உள்ள பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு (L.K.G முதல் 10ம் வகுப்புவரை) அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெறுகிறது.பள்ளி செல்லா குழந்தைகளுக்கு அங்கான்வாடி மையங்களில் நடைபெறுகிறது.

பொது சுகாதார துறையில் மருத்துவர்கள், சமுதாயநல செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், கிராமசுகாதார செவிலியர்கள், செவிலியர்கள், நடமாடும் மருத்துவ குழுக்கள் மற்றும் பள்ளி சிறார் மருத்துவ குழுக்கள் மூலம் தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

மாவட்ட கல்விதுறை, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் ஊட்டசத்துதுறை, மற்றும் தழிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட அரசு துறைகள் மற்றும் IMA&IAP ஆகியோரின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து 9 மாதம் முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தட்டமை ரூபெல்லா தடுப்பூசி செலுத்தி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

  • Share on

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் சார்பில் 40 ஆயிரம் பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்!

தூத்துக்குடியில் இருந்து போக விரும்பாததால் வேதாந்தா நிறுவனம் இதை செய்கிறது!

  • Share on