• vilasalnews@gmail.com

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் சார்பில் 40 ஆயிரம் பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் சார்பில் 40 ஆயிரம் பேருக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்த‌து. குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் அதிகனமழை பெய்த‌து. தூத்துக்குடியில் இடைவிடாது இரண்டாவது நாளாக மழை தொடர்ந்து பெய்ததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

குறிப்பாக ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர், ஏரல், முக்காணி, புன்னக்காயல், தூத்துக்குடி துறைமுகம் குடியிருப்பு, தெர்மல்நகர், முத்தம்மாள் காலனி, குறிஞ்சிநகர், ஸ்டேட் பாங்க் காலனி, முத்தையாபுரம், சோட்டையன் தோப்பு, ஜெ.ஜெ.நகர், சவேரியார் புரம், ராஜிவ் நகர், பி.அன்.டி.காலனி, திருவிக நகர் உட்பட 100க்கும் மேற்பட்ட பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பெருமளவு பாதிக்கப்பட்டது.

வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டு வீடுகளை விட்டு வெளியேறிய‌ மக்களுக்கு உடனடியாக உதவ தூத்துக்குடி மாவட்ட தலைவர் சக்தி.ஆர்.முருகனுக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் ஆன்மிக இயக்க தலைவர் இலட்சுமி பங்காரு அடிகளார் உத்தரவிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மூலம் சக்திபீடங்கள், ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் மற்றும் செவ்வாடை தொண்டர்கள் களத்தில் இறங்கினர். கடந்த 14 நாட்களாக 25 ஆயிரம் பேருக்கு உணவு, பால்பவுடர், பிஸ்கட், தண்ணீர் பாட்டில், மெழுகுவர்த்தி, ரொட்டி, போர்வை, சாரம், நைட்டி, நாப்கின், அரிசி, காய்கனி, மளிகை பொருட்கள், மருத்துவம் சார்ந்த உதவிகளை வழங்கினர்.

மேலும், பல இடங்களில் மக்கள் கழுத்தளவு தண்ணீரில் தத்தளித்து வீடுகளை விட்டு வெளியேறாமல் தவித்த தகவலை அறிந்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்டோரை டிராக்டர்கள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணியை செவ்வாடை பக்தர்கள் செய்தனர். தொடர் சேவையில் ஈடுபட்ட பங்காரு அம்மா பக்தர்களை பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளும் பாராட்டியுள்ளது.

தூத்துக்குடி திருவிக நகர், இந்திராநகர் பகுதியில் 15வது நாட்களாக நிவாரணம் வழங்கப்பட்டது. அப்பகுதி மக்களுக்கு இன்று ஆடைகள் மற்றும் போர்வைகள் வழங்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் சார்பில் 40 ஆயிரம் பேருக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

  • Share on

விளாத்திகுளம் பூங்காவில் விளையாடிய சிறுவன் இறப்பிற்கு யார் காரணம்? அலட்சியத்தால் நடத்த விபரீதம்!

உங்கள் வீட்டில் 9 மாதம் முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகள் இருக்காங்களா? அப்படினா இதை தெரிஞ்சுகோங்க!

  • Share on