• vilasalnews@gmail.com

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு குவிந்த பக்தர்கள் - நீண்ட நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்!

  • Share on

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

முருகப்பெருமாளின் ஆறுபடைவீடுகளில் இரண்டாம் படைவீடாக விளங்கும் புண்ணிய ஸ்தலம் திருச்செந்தூர். இங்கு ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு திருக்கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபாராதனையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 12 மணி முதலே வரிசையில் நின்றனர். வரிசை கோவில் பிரகாரத்தையும் தாண்டி நீண்டுகொண்டே சென்றது. பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வசதியாக இலவச தரிசனம் மற்றும் 100 ரூபாய் கட்டணம், மூத்த குடிமக்கள் தரிசனம் என தனித்தனியே வரிசைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. பக்தர்கள் சுமார் 5 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

கோவில் வளாகத்தில் உள்ள சண்முக விலாசமண்டபம், கிரிப்பிரகாரம், நாழிக்கிணறு, கடற்கரை மற்றும் மொட்டை போடும் இடம், காதுகுத்தும் இடம், துலாபாரம் செலுத்தும் இடம் எங்கிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.  மேலும்,தனியார் விடுதிகள், சன்னதி தெருவில் உள்ள சமுதாய மடங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பிவழிந்தது.

பாதயாத்திரையாக குழுக்களாக வருகை தந்த பக்தர்கள் மேளதாளத்துடன் காவடி, பால்குடம் எடுத்து வந்தனர். நிறைய பக்தர்கள் ஒரு அடி முதல் 21 அடி வரை அலகு (வேல்) குத்தி வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். 

தமிழகம் முழுவதிலும் இருந்து முருகப்பெருமாளை வழிபட கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் பக்தர்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், சுகாதாரம், கழிப்பிட வசதிகளை செய்து இருந்தனர். சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்ற பக்தர்களுக்கு குடிநீர் வழங்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அறிவுறுத்தலின்படி, திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் முரளி மற்றும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். 

கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வசதியாக, அனைத்து  ஏற்பாடுகளையும் கோவில் இணை ஆனையர் கார்த்திக், அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் மற்றும்  மனோஜர் சிவநாதன், உள்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.

  • Share on

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் யுனிமணி இந்தியா

தூத்துக்குடிக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் அறிவிப்பு... ஊரையே மாற்ற போகுதாம்!

  • Share on