தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில், மாணவியின் மருத்துவ படிப்புக்கான கல்வி உதவித் தொகையை, மாநில தலைவர் எர்ணாவூர் நாராயணன் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் ஏழை மாணவியின் மருத்துவ படிப்புக்கான கல்வி உதவி தொகையாக ரூபாய் 15000/-க்காண காசோலையை, இன்று ( 18.1.2021 ) பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்வதற்காக, தூத்துக்குடி வருகை தந்த சமத்துவ மக்கள் கழக மாநில தலைவர் எர்ணாவூர் நாராயணன் வழங்கினார்கள்.
இந்நிகழ்வின் போது, சமத்துவ மக்கள் கழகம் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ், மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ்டேவிட், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் அந்தோணிபிச்சை, மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், துணை செயலாளர் அருள்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ், பிரதிநிதிகள் வின்சென்ட், பழனிவேல்,
இளைஞரணி செயலாளர் டேனியல்ராஜ், இளைஞரணி துணை செயலாளர் சிவசு.முத்துக்குமார், மாணவரணி துணை செயலாளர் பிரகாஷ், தொழிலாளரணி செயலாளர் சதாசிவம், விவசாய அணி துணை செயலாளர் பொன்ராஜ், மாநகர செயலாளர் உதயசூரியன், அழகுவேல், ஒன்றிய செயலாளர்கள் தனசெல்வ ராஜா, சதீஷ்மூர்த்தி, ராஜேஷ் , வெள்ளத்துரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.