கடந்த 17, 18 ஆம் தேதி தூத்துக்குடியில் பெய்த பெரும் மழையின் காரணமாக மாநகர் முழுவதும் மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளானார்கள்.
குறிப்பாக முத்தம்மாள் காலனி, ரஹமத் நகர், தனசேகர் நகர், ஸ்டேட் பாங்க் காலனி, இந்திரா நகர், திரு.வி.க நகர், போன்ற பகுதிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்களின் இயல்பு நிலை வெகுவாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், காங்கிரஸ் மாநில துணை தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம் ஆலோசனை மற்றும் ஏற்பாட்டின் பேரில், தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி. எஸ்.முரளிதரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் முதல் கட்டமாக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளான முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகர், ரஹமத் நகர், தனசேகரன் நகர், போன்ற பகுதிகளுக்கு சென்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உணவு, தண்ணீர் பாட்டில்களை வழங்கினர்.
இதனையடுத்து, 2ம் கட்டமாக நிவாரண உதவியாக, பக்கிள் புரம், ராஜகோபால்நகர், சுந்தரவேல் புரம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு, மளிகை பொருட்கள், சேலை, வேஷ்டி உள்ளிட்ட பொருட்களை காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஐஎன்டியூசி தொழிற்சங்க அமைப்புச் செயலாளர் ராஜ், மாவட்ட செயலாளர் குமார முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .