• vilasalnews@gmail.com

குளத்தூரில் இருந்து சிவஞானபுரம் செல்லும் சாலை சீரமைப்பு - போக்குவரத்து தொடக்கம்!

  • Share on

குளத்தூரில் இருந்து சிவஞானபுரம் செல்லும் சாலையானது மழையால் சேதமடைந்து துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், குளத்தூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சாலை சீரமைக்கப்பட்டதைத் தொடந்து, அவ்வழியாக மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17,18ம் தேதிகளில் பெய்த அதிகனமழையால், குளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு கண்மாயில் இருந்து உபரியாக  மறுகால் வழியாக  குளத்தூர் தெற்கு கண்மாய்க்கு செல்லும் இரண்டு கண் பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது. 


இதனால்  குளத்தூரில் இருந்து த.சுப்பையாபுரம் வழியாக சிவஞானபுரம் செல்லும் பாதையானது முற்றிலும் துண்டிக்கப்பட்டது. அவ்வழியாக போக்குவரத்தும் முற்றிலும் தடைபட்டு, பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.


இதனையடுத்து, குளத்தூர் ஊராட்சி நிர்வாகம், போர்க்கால அடிப்படையில் அவ்வழித்தடத்தை உடனடியாக சீரமைத்ததைத் தொடந்து, நேற்று ( 24.12.23 ) மாலை முதல் மீண்டும் அந்த வழியாக போக்குவரத்து தொடங்கியது.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் சுங்க கட்டணம் கிடையாது - மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடியில் வெள்ள நிவாரண நிதி ரூ.6000 ரெடி... டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்!

  • Share on