கடந்த 17ஆம் தேதி தூத்துக்குடியில் பெய்த பெரும் மழையின் காரணமாக மாநகர் முழுவதும் மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளானார்கள்.
குறிப்பாக முத்தம்மாள் காலனி, ரஹமத் நகர், தனசேகர் நகர், ஸ்டேட் பாங்க் காலனி, இந்திரா நகர், திரு.வி.க நகர், போன்ற பகுதிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்களின் இயல்பு நிலை வெகுவாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், காங்கிரஸ் மாநில துணை தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம் ஆலோசனை பேரில், தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி. எஸ்.முரளிதரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் இன்று வெள்ளம் சூழ்ந்த பகுதிகளான முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகர், ரஹமத் நகர், தனசேகரன் நகர், போன்ற பகுதிகளுக்கு சென்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உணவு, தண்ணீர் பாட்டில்களை வழங்கினர்.
வீடுகளில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கின்ற ஏழை எளிய மக்களுக்கும் உணவு பொருட்கள் சென்றடைய வேண்டும் என்ற வகையில் டிராக்டர் ஏற்பாடு செய்து அதில் உணவைக் கொண்டு சென்று வீடு வீடாக வெள்ளம் சூழ்ந்த பகுதியிலும் வழங்கினர்.
இப்பணிகளில், மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் விஜயராஜ், மாவட்ட காங்கிரஸ் செயலாளர் குமாரமுருகேசன், மைக்கில், கலை இலக்கியப் பிரிவு மாவட்ட தலைவர் செல்வராஜ், நடேஷ்குமார் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.