• vilasalnews@gmail.com

தூத்துக்குடிக்கு பெரும் துயரத்தை கொடுத்த பெருமழை... மீட்டெடுக்கும் மேயர் ஜெகன் பெரியசாமி

  • Share on

மழை பெய்து நான்கு நாட்களுக்குப் பிறகும் தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகள் நீரில் மிதக்கின்றன. உதவிகளைக் கோரி பல பகுதிகளில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இன்று ( டிச., 21 ) மழை வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் மழை நீர் அப்புறப்படுத்தப்பட்டு, மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்ப ஆரம்பித்துள்ளது.

கடந்த சனி - ஞாயிற்றுக்கிழமைகளில் பெய்த பெரு மழையானது தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகரத்தையே புரட்டி போட்டுவிட்டது.


நான்கு நாட்கள் கடந்த நிலையிலும் மாநகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருக்கிறது. முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர், அம்பேத்கர் நகர், ஸ்டேட் பாங்க் காலனி, தபால் தந்தி காலனி, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் நிற்கிறது. இருப்பினும் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குச் செல்வது கொஞ்சம் சுலபமாகி உள்ளது.

மழை நீர் தேங்கியிருப்பது ஒரு பிரச்சனை என்றால், இதன் காரணமாக பல இடங்களில் இன்னும் மின்சாரம் தரப்படாதது இதைவிட பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

இதனால், குடிநீர், மொபைல் இணைப்பு போன்றவை கடுமையாக பாதிக்கப்பட்டிக்கின்றன. மின்சாரம் தரக் கோரியும் உணவு, குடிநீர் போன்றவற்றைக் கோரியும் கவுன்சிலர்கள் தங்களை வந்து பார்க்க வேண்டும் எனக் கோரியும் பொது மக்கள் ஆங்காங்கே சில சாலை மறியலில் ஈடுபடுகின்றனர்.


தூத்துக்குடி மழை பாதிப்பில் இருந்து மீள வெகு நாட்களாகும் என்று கணிக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாக தூத்துக்குடி மாநகரம் மீண்டு வரும் செய்தி ஆறுதல் தருகிறது. பிரையண்ட் நகர், பாளை ரோடு, அண்ணா நகர் பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழை நீர், பெரும்பாலான அளவில் அப்புறப்படுத்தப்பட்டு, அங்கு மின்சாரம் வழங்கப்பட்டு, பல வணிக கடைகள் திறக்கப்பட்டு, இன்று ( டிச.,21 ) மாலை முதல் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் நிலை உருவாகி இருக்கிறது.

பெரு மழையில் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த தூத்துக்குடி மாநகரத்தை, இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப பல்வேறு தரப்பினர் போராடினாலும், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியின் உழைப்பு பாராட்ட தக்கதாக சொல்லப்படுகிறது.


மழை பெய்யத்தொடங்கிய சனிக்கிழமை இரவு முதல் இன்று வரையிலும் தூத்துக்குடி மாநகராட்சியில் பாதிப்பிற்குள்ளான இடங்கள், மாநகராட்சி அலுவலகம், முகாம் அலுவலகம் ஆகியவைகளே கதி என கிடந்து தனியொரு மனிதராய், ஓய்வும் தூக்கமும் இன்றி பணியாற்றி வந்த போதிலும், உணர்ச்சிவசப்பட்டு போராட்ட நிலைக்கு தள்ளப்பட்ட மக்களையும் நேராக சந்தித்து அவர்களை சாந்தப்படுத்தி, மக்கள் பணியை திறம்பட கையாண்ட மேயர் ஜெகன் பெரியசாமியின் செயல்பாடு  அனைவரிடமும் பாராட்டை பெற்று இருக்கிறது.


சில அரசியல் காரணங்களால், இந்த மழை பாதிப்பை பயன்படுத்தி மேயர் ஜெகன் பெரியசாமியை தனியாக தத்தளிக்கவிட்டு, மாநகராட்சி நிர்வாக திறமைக்கு அவப்பெயரை ஏற்படுத்தி, அவரை பழி தீர்க்கப்பட்ட ஆசைப்பட்டோருக்கு இறுதியில் தோல்வி கிடைத்தது தான் மிச்சம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

முதல் முறையாக மக்கள் பிரதிநியாக ஆன போதிலும், மிகப்பெரிய சவலான பணியை எதிர்கொண்டு வெற்றி வாகை சூடிவரும் ஜெகன் பெரியசாமி செயல் பலரது கண்களையும் விரிய வைத்துள்ளது. 

இந்தமழையில் பாதிக்கப்பட்டோரை நாங்கள் தான் மீட்கிறோம் என போட்டோ ஷுட் நடத்திகொண்டிருப்போரின் மத்தியில், வெறும் டீ சர்ட்டோடு பணியாற்றி வரும் ஜெகன் பெரியசாமி பணியே சிறப்பு என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள் 

மொத்தத்தில் இந்த மழை பல தாழ்வான பகுதிகளையும், தாழ்வான மனங்களையும் மூழ்கடித்துவிட்டது.

  • Share on

தூத்துக்குடி மாநகரில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் தன்னார்வலர்களுக்கு மேயர் கொடுத்த வேண்டுகோள்!

தூத்துக்குடி மழை வெள்ளப்பாதிப்பு பகுதிகளில் நிவாரணம் வழங்கிய காங்கிரஸ்

  • Share on