தூத்துக்குடி மாநகரில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் தன்னார்வலர்கள் மாநகராட்சி சுகாதார அலுவலர்களை தொடர்பு கொண்டு பொருட்களை வழங்கவும் என தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
வரலாறு காணாத அளவுக்கு பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய தண்ணீர் மாண்புமிகு முதல்வர் அவர்களின் உத்தரவின்படி, அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர், ஆகியோர் மேற்பார்வையில் அகற்றப்பட்டு வருகிறது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் தன்னார்வலர்கள் சிலர் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே வழங்கிவிட்டு செல்வதால் மக்கள் மாநகராட்சி நிர்வாகத்தின் மீது அதிருப்தி தெரிவிக்கும் நிலை உள்ளது.
மாநகராட்சி பகுதியில் நிவாரணப் பொருட்கள் கொண்டுவரும் தன்னார்வலர்கள் மாநகராட்சி சுகாதார அலுவலர்களை தொடர்பு கொண்டு பொருட்களை வழங்கவும் என கேட்டுக்கொள்கிறேன். என தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.