• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் 3 நாட்களை கடந்தும் நீடிக்கும் மழை வெள்ள பாதிப்பு

  • Share on

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது.

அதிகனமழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பல குளங்களில் உடைப்பு ஏற்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது மழை நின்றுள்ளதால் தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. இதனால், பல்வேறு பகுதிகளை சூழ்ந்திருந்த வெள்ளநீர் தற்போது மெல்ல வடியத்தொடங்கியுள்ளது.

இந்நிலையில், அதிகனமழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு இன்று தூத்துக்குடி வந்துள்ளது. விமானம் மூலம் தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகர் கர்னல் ஏ.பி.சிங் தலைமையில் விஜயகுமார், தங்கமணி, பொன்னுசாமி ஆகியோர் அடங்கிய குழு தூத்துக்குடி வந்துள்ளது.


அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இந்த குழுவினர் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வுக்கு பின் வெள்ள பாதிப்பு விவரங்களை இந்த குழு மத்திய அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்னமும் வெள்ளநீர் வடியாமல் மக்கள் தத்தளித்து தான் வருகின்றனர். பல்வேறு தன்னார்வு தொண்டு அமைப்பினர் உணவு, பால், தண்ணீர் பாட்டில் உள்ளிடவைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்தும் பிஸ்கட், பிரட் பாக்கெட், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிடவைகளும் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் தினேஷ் குமார் மிகவும் பொறுப்புணர்வுடன் தனியொரு நபர்களாக ஆங்காங்கே சுழன்று பல்வேறு வெள்ள மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் பல்வேறு அதிகாரிகள் மாநகராட்சி அலுவலகத்தில் முகாமிட்டு கூடி மட்டுமே இருந்து வருகின்றனர். களத்தில் மக்களுக்கான எந்தவொரு மீட்பு பணிகளையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


தன்னார்வலர்கள் தாங்கள் தயாரித்த உணவு பொருட்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல, வாகன உதவி கேட்டு, மாநகராட்சி அதிகாரிகளை நேரடியாக அலுவலகம் வந்து கேட்டுக்கொண்டாலும், அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. 

 2 நாட்கள் மழை ஓய்ந்து மக்களுக்கு கொஞ்சம் நிம்மதியை தந்திருந்த மழை, தற்போது ( 20.12.24 - பிற்பகல் 2.30 மணி )  லேசாக பெய்ய தொடங்கி, மக்களுக்கு புதிய ஒரு பீதியை கிளப்ப ஆரம்பித்திருக்கிறது. கடந்த 17,18ம் தேதிகளில் பெய்த மழைக்கே விடை தெரியாமல் இருக்கும் நிலையில், மீண்டும் மீண்டும் மழையா என்ற அதிர்ச்சியை பொதுமக்களுக்கு தந்துள்ளது.

  • Share on

தூத்துக்குடியை சுத்துபோட்ட கனமழை... வீடுகளுக்குள் புகுந்த மழை நீரால் பொதுமக்கள் அவதி!

தூத்துக்குடியை மீண்டும் மிரட்ட காத்திருக்கிறதா மழை... மேகமூட்டத்துடன் காணப்படும் வானம்!

  • Share on